தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது நாய் சேகர் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் 9ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான ப்ரோமோஷன் பணிகளில் அப்படக்குழு மும்முரமாக இறங்கியுள்ளது.
வைகை புயல் வடிவேலு பல ஆண்டுகள் நடிப்பிற்கு விடுப்பு கொடுத்திருந்தார். இதனால் சினிமா ரசிகர்கள் கவலையில் இருந்தனர். இந்நிலையில் மீண்டும் படங்களில் நடிப்பதற்கு ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளார் வைகைப்புயல் வடிவேலு. இதனால் தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் வடிவேலு தற்போது நாய் சேகர் படத்தில் கதாநாயகனாக நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனத்தையே பெற்றது இருப்பினும் வடிவேலுவை மீண்டும் திரையரங்கில் காண மக்கள் ஆர்வமாக உள்ளனர்.
நாய் சேகர் படத்தின் ப்ரோமோஷன் பணிகளுக்காக எத்திராஜ் கல்லோரியில் நடந்த விழாவில் நடிகர் வடிவேலு கலந்துகொண்டார். வடிவேலு இருந்தாலே அந்த இடத்தில் பொழுதுபோக்குக்கு பஞ்சம் இருக்காது என்பது அனைவரும் அறிந்ததே, இந்நிலையில் அந்த கல்லூரியின் மேடையில் வடிவேலு குத்தாட்டம் போடும் விடீயோக்கள் வெளியாகி பெரிய அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. அவருடன் சேர்ந்து மாணவர்களும் நடனமாடி மகிழ்வது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.