டேஸ்டியான கீரை கூட்டு செய்யலாமா..?
கீரையில் பலவிதமான சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனை மதிய உணவாக சமைத்து சாப்பிட உகந்தது. கீரைகளில் அடங்கியிருக்கும் நார்ச்சத்துக்கள் செரிமான பிரச்சனைகளை சீராக்கி மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது. இது பெருங்குடல் புற்றுநோயை தடுக்க உதவியாக இருக்கிறது.
தேவையான பொருட்கள்:
- துவரம் பருப்பு ஒரு கப்
- எண்ணெய்
- அரை டீஸ்பூன் சீரகம்
- மூன்று பல் பூண்டு
- மூன்று பச்சை மிளகாய்
- பத்து சின்ன வெங்காயம்
- ஒரு தக்காளி
- கீரை
- மஞ்சள் தூள்
- வேக வைத்த பருப்பு
- உப்பு
- எண்ணெய்
- கடுகு
- உளுத்தம் பருப்பு
- கால் டீஸ்பூன் சீரகம்
- கருவேப்பிலை
- பெருங்காயத்தூள்
- இரண்டு வரமிளகாய்
- கீரையை நீரில் சுத்தமாக கழுவி அதனை நறுக்கிக் கொள்ள வேண்டும்.
- ஒரு குக்கரில் துவரம் பருப்பை நீரில் கழுவி பின் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 5 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.
- ஒரு வாணலை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், பூண்டு, பச்சை மிளகாய், நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.
- பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.
- அடுத்ததாக நறுக்கிய கீரைகளை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
- பின் மஞ்சள்தூள், முன்பு வேகவைத்த துவரம் பருப்பை சேர்த்து, தேவையான அளவு உப்பு மற்றும் நீர் சேர்த்து கிளறிவிட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
- அடுத்தது தாளிக்க ஒரு வாணலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை வரமிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து பின் அதனை பருப்பில் சேர்த்து கிளறி விட வேண்டும்.
- அவ்வளவுதான் சூப்பரான கீரை கூட்டு தயார். சூடான சாதத்தில் இந்த கீரை கூட்டு போட்டு பிசைந்து சாப்பிடுங்க, சூப்பராக இருக்கும்.