டீ கடை கஜரா இனி வீட்ல செய்ங்க… நொறுக்கு தீனி..!
மைதா மாவு – 1 கப்
அரிசி மாவு – 2 ஸ்பூன்
ரவை – 2 ஸ்பூன்
காய்ச்சாத பால் – 1/2 கப்
எண்ணெய் – 4 ஸ்பூன்
உப்பு – சிறிது
எண்ணெய் – தேவையான அளவு
சர்க்கரை – 1/2 கப்
ஏலக்காய் 4
- ஒரு மிக்ஸியில் ஏலக்காய் மற்றும் சர்க்கரையை போட்டு பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
- பின் இதில் பால் மற்றும் எண்ணெய் சேர்த்து கலக்க வேண்டும்.
- பின் அதில் மைதா மாவு, அரிசி மாவு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிசைய வேண்டும். இதனை அரைமணி நேரம் நன்றாக ஊற விடவும்.
- பின் ஊற வைத்த மாவை தண்ணீர் தொட்டு தேவையான அளவிற்கு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.
- ஒரு வாணலை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இந்த உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
- அவ்ளோதான் டீ கடையில் கிடைக்கும் சுவையான கஜரா இனி வீட்டில் செய்யலாம்.
