சுவையான பைனாப்பிள் ஜாம் இனி வீட்டிலே…!
- பைனாப்பிள் – 2 சிறிய அளவு
- சர்க்கரை – 2 கப்
- லெமன் ஜூஸ் – 1 ஸ்பூன்
நன்றாக பழுத்த அன்னாச்சி பழத்தை எடுத்துக் கொண்டு அதன் தோலை சீவி கொள்ளவும்.
பின் அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொண்டு அதை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். இதில் அதிக நீர் இருந்தால் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலை அடுப்பில் வைத்து அரைத்த அன்னாச்சி பழத்தை அதில் ஊற்றி தீயை மிதமாக வைத்து வேகவைக்க வேண்டும்.
பின் அதில் எலுமிச்சை சாறு மற்றும் சர்க்கரை கலந்து நன்றாக கலந்து விட வேண்டும். இதில் சேர்க்கும் எலுமிச்சை சாறு அன்னாச்சி பழத்தின் சுவையை அதிகரிக்கும். மேலும் ஜாம் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.
அப்படியே மிதமான தீயில் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும் கலவை கெட்டியாக வரும்வரை. அந்த பதத்திற்கு வந்ததும் கொஞ்ச ஜாம் எடுத்து நீரில் போட வேண்டும், அப்படி செய்யும்போது அது நீரில் கரையாமல் இருந்தால் ஜாம் தயாராகிவிட்டது என்று அர்த்தம்.
