பெங்காலி ஸ்பெஷல் ரசகுல்லா இன்னிக்கு ஈசியா வீட்ல செய்யலாமா..!
பால்-1 ½ லிட்டர்.
எழுமிச்சை ஜூஸ்-2 பழம்.
சக்கரை-1கப்.
குங்குமப்பூ- தேவையான அளவு.
ஏலக்காய்-4.
ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்றாக கொதிக்க விட வேண்டும்.
பின் பாலில் 2 எலுமிச்சை பழ சாற்றை ஊற்றவும். இப்போ பால் திரிந்து போய்விடும்.
பின் தண்ணீரை வடிகட்டி பன்னீரை எடுத்து ஒரு சுத்தமான வெள்ளை காட்டன் துணியில் கட்டி 30 நிமிடங்களுக்கு அப்படியே வைக்கவும்.
பின் பன்னீரை எடுத்து கையால் நன்றாக பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலை வைத்து சர்க்கரை மற்றும் தண்ணீரை ஊற்றி ஏலக்காய் சேர்த்து கொதிக்க விடவும்.
சர்க்கரை நன்றாக கரைந்ததும் அதில் உருட்டிய உருண்டைகளை போட்டு இறக்கி வைத்து விடவும்.
அரை மணி நேரத்திற்கு பாகில் ஊறினால் ரசகுல்லா தயார் ஆகிவிடும்.
அவ்வளவுதான் சுவையான ரசகுல்லா தயார் சாப்பிடும்போது குங்குமப்பூ கொஞ்சம் தூவி சாப்பிடலாம்.