அந்த விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை அம்பிகா..!
80களின் எவர்கீரின் நடிகை என்று சொன்னால் நம் மனதில் முதலில் நினைவில் வருவது நடிகை அம்பிகா தான். ரஜினி, கமல், சத்யராஜ் போன்ற முன்னனி நடிகர்களுடன் நடித்த அம்பிகா தமிழில் மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு, மலையாள மொழிகளியிலும் நடித்துள்ளார்.
80களில் கொடிகட்டி பறந்த நடிகைகளுள் ஒருவரான இவர் உத்தமபுத்திரன், அவன் இவன் போன்ற திரைப்படங்களின் மூலம் கதாநாயகனுக்கு அம்மா கதாபத்திரத்தில் நடிக்க தொடங்கினார்.
தற்போது தனியார் தொலைக்காட்சியில் ஔிபரப்பாகி வரும் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
திருமண வாழ்க்கை:
1988 ல் பிரேம் குமார் மோகனை திருமணம் செய்து 8 ஆண்டுகள் கழித்து கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். அதன்பின்னர், 6 ஆண்டுகளுக்கு பின்னர் 2000 ஆம் ஆண்டு ரவிகாந்த் என்பவரை திருமணம் செய்து இரண்டு ஆண்டுகளில் அவரையும் விவாகரத்து பெற்று பிரிந்த நிலையில் தற்போது தன் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார்.
ரவிகாந்த் பேட்டி:
இந்நிலையில், நடிகர் ரவிகாந்த் முதன்முதலாக ஒரு தகவலை கூறி பல வருட வதந்திகளுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
அதாவது, சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் என்னைப் பற்றி பல வதந்திகள் பரப்பபடுகிறது. இதனால், மக்கள் உங்களுக்கு என்ன வரப்போகிறது நான் ஒரு உண்மையை சொல்கிறேன். என்னை அம்பிகாவின் கணவர் என்று செய்திகள் வெளியானது.
”நானும், அம்பிகாவும் நாலு மொழிகளில் கிட்டத்தட்ட 16 படங்களில் கணவன் மனைவியாக நடித்து இருக்கிறோம். எங்களுடைய வீடு பக்கத்து பக்கத்து வீடு அதுக்கு எதுக்கு ரெண்டு வண்டியில போகணும் என்று ஒரே வண்டியில் போவோம். செட்டுக்கு ஒன்றாக போனதும் செட்டில் புருஷனும் பொண்டாட்டியும் வந்துட்டாங்க ஷாட்டுக்கு போலாம்னு சொல்லுவாங்க இதை பார்க்கிறவர்கள் என்ன நினைப்பார்கள் அதுதான் நடக்கிறது.
அந்த பொண்ணு பாவம் அமெரிக்காவில் பிரேம்குமார் மோகன் என்பவரை திருமணம் செய்து ராம்குமார் ரிஷி குமார் என்ற மகன்களை பெற்று நிம்மதியாக இருக்காங்க, சீன் வரும் போது இங்கு வந்து நடிச்சிட்டு போவாங்க, இதுதான் உண்மை தயவு செய்து இனி சோசியல் மீடியாவில் வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
-பவானி கார்த்திக்