வைட்டமின்-சி குறைபாட்டின் அறிகுறி..! அதை சரிசெய்யும் இயற்கை மருத்துவம்..!
உடலின் சீரான செயல்பாட்டிற்கு வைட்டமின் சி மிகவும் இன்றியமையாதது. ஆனால் சிறிது நாட்களுக்கு முன் எடுத்த சர்வே ஒன்றில், உலகில் பெரும்பான்மையான மக்கள் வைட்டமின் சி குறைபாட்டினைக் உடையவராக இருப்பது தெரிய வந்துள்ளது. நம் உடலால் மற்ற ஊட்டச்சத்துக்களைப் போல், வைட்டமின் சி-யை உற்பத்தி பண்ண இயலாது .
ஆகவே வைட்டமின் சி நம் உடலுக்கு வேண்டுமானால், அதை உணவுகளின் மூலம் தான் அதிகம் பெற முடியும். உடலில் வைட்டமின் சி குறைவாக இருந்தால், அதனால் பல்வேறு தீவிரமான உடல்நல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என உடல்நல நிபுணர்களும் கூறுகின்றனர்.
உடலில் வைட்டமின் சி குறைவாக இருந்தால் ஒருசில அறிகுறிகள் தென்படும். அதனைக் தெரிந்து கொண்டு, இக்குறைபாட்டினைப் போக்க பயன்படும் உணவுப் பொருட்களை நாம் தினமும் உட்கொண்டு வந்தால், நிச்சயமாக வைட்டமின் சி குறைபாட்டினை கூடிய விரைவில் சரிசெய்யலாம் என்பதே நிதர்சனம் .
* முடி வெடிப்பு
* காயங்கள் குணமாவதில் தாமதம்
* ஈறுகளில் வீக்கம் மற்றும் நிறம் மாறி இருப்பது
* ஈறுகளில் இருந்து இரத்தம் கசிவது
* கடுமையான மூட்டு வலிகள்
கொய்யாப்பழத்திலும் வைட்டமின் சி உள்ளது. அதிலும் ஒரு கொய்யாப்பழத்தில் மட்டும் அதிகமாக 200 மிகி வரை வைட்டமின் சி உள்ளது. மேலும் இது உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும் ஓர் சுவையான பழமும் கூட.
கிவி பழத்தை வைட்டமின் சி குறைபாடு அதிகம் கொண்டவர்கள் சாப்பிடுவார்கள் அதேயே மருத்துவர்களும் பரிந்துரைப்பார்கள். ஏனென்றால் இப்பழத்தை உட்கொள்ளும் பொழுது, வைட்டமின் சி உடலில் வேகமாக அதிகரிப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியும் வேகமாக அதிகரிக்கும்.
ப்ராக்கோலியில் நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களும், கனிமச்சத்துக்களும் மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ளது. 100 கிராம் ப்ராக்கோலியில் 89,2 மிகி வைட்டமின்-சி உள்ளது.
நம் எல்லாருக்குமே தெரியும் ஆரஞ்சு பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி வளமாக உள்ளது என்று. ஆகவே தினமும் ஒரு ஆரஞ்சு பழத்தை உட்கொண்டு, அல்லது ஜுஸ் ஆக குடித்தால் வைட்டமின் சி குறைபாட்டில் இருந்து விடுபடலாம்.
திராட்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லிக்காய் போன்றவற்றைச் சிட்ரஸ் பழங்கள் என்கிறோம். இவற்றில் வைட்டமின் சி சத்து அதிகமாக இருப்பதால் இவ்வாறான பழங்களையும் நாம் உட்கொள்ளலாம்
வெப்பமண்டல பழமான பப்பாளியில் வைட்டமின் சி ஏராளமான அளவில் உள்ளது. எனவே நாம் யாருக்கும் வைட்டமின் சி குறைபாடு ஏற்படாமல் இருக்க வேண்டுமெனில், தினமும் சிறிது பப்பாளி பழத்தை உட்கொண்டு வரலாம் .
சிட்ரஸ் பழங்களைப் போல் ஸ்ட்ராபெர்ரியிலும் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. எனவே ஸ்ட்ராபெர்ரி சீசனின் போதும் தவறாமல் அப்பழத்தை வாங்கி சுவைத்து வந்தால் நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளலாம்.
– வீர பெருமாள் வீர விநாயகம்