நூடஸ் மசாலா பொடி இனி வீட்டில் செய்யலாம்…!
நூடல்ஸ் என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவு பொருளாகும். நூடல்ஸை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.
நூடஸ்ஸை அனைவருக்கும் பிடிப்பதற்கான காரணம் அதில் உள்ள மசாலா தான். எல்லோருக்கும் பிடித்தமான சுவையில் மசாலா இருப்பதே இதன் சிறப்பு ஆகும்.
இனிமேல் அத்தகைய சுவை மிகுந்த மசாலாவை வீட்டிலே தயாரிக்கலாம். எப்படினு பார்க்கலாம் வாங்க..
மசாலா தயாரிக்க தேவையான பொருட்களில் அனைதையும் சம அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
பொருட்கள்:
சீரகம்
கொத்தமல்லி விதை
மிளகு
பூண்டு
கரம் மசாலா
அனைத்து மசாலா பொருட்களையும் ஒரு வாணலில் போட்டு எண்ணெய் இல்லாமல் சூடு படுத்திக் கொள்ளவும். பின் ஆற வைத்து அரைத்துக் கொள்ளவும்.
மற்றொரு வாணலில் பூண்டு வெங்காயம் ஆகியவற்றை போட்டு நீர் இல்லாமல் நன்றாக சூடு செய்து கொண்டு, அரைத்துக் கொள்ளவும்.
அனைத்தையும் நன்றாக ஆற வைத்து அனைத்து பொடியையும் ஒன்றாக கலந்து அதனுடன் கரம் மசாலாவையும் கலந்து உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அவ்ளோதான் சுவையான நூடல்ஸ் மசாலா இப்போது வீட்டிலே தயார்.
இந்த மசாலாவை காய்கறிகள் பொரியலில் தூவி பொரியல் செய்தால் சுவையாக இருக்கும்.