தேசிங்கு ராஜா இரண்டாம் பாகம்… புதிய அப்டேட்.. வெளியிட்ட படக்குழு..!
துள்ளாத மனமும் துள்ளும், பூவெல்லாம் உன் வாசம், தீபாவளி, மனம் கொத்தி பறவை போன்ற மெக ஹிட் படங்களை இயக்கிய இயக்குநர் எழில் இயக்கத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘தேசிங்கு ராஜா.
இந்த படத்தில் நடிகர் விமல்,பிந்து மாதவி,சூரி, ஆகியோர் நடிப்பில் காமெடி ஜானரில் வெளிவந்த இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. டீஇமான் இசையில் உருவாகிய இப்படத்தின் இரண்டாம் பாகம் 10ஆண்டுகளுக்கு பின் தொடங்கியது.
தேசிங்கு ராஜா 2:
இ்தன் முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் எழில் தான் இந்த படத்தையும் இயக்கியுள்ளார். விமல் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் தெலுங்கு நடிகைகள் பூஜிதா பொன்னாடா, ஹர்ஷிதா கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.
வித்யாசாகர் இசையமைக்கும் இப்படத்தில் ஜனா, ரவிமரியா, ரோபோ சங்கர், சிங்கம் புலி, கிங்ஸ்லி, புகழ், ராஜேந்திரன், மதுமிதா உட்பட பலர் நடிக்கின்றனர்.
இந்நிலையில் தேசிங்குராஜா-2′ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்த படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தேசிங்கு ராஜா 2 கதை:
வெவ்வேறு நோக்கங்களுடன் கல்லூரியில் படிக்கும் 4 நண்பர்கள் வேறு வேறு பாதையில் பயணிக்கிறார்கள். இவர்கள் வாழ்க்கை எப்படி இருந்தது. இவர்கள் எந்த சூழ்நிலையில் மீண்டும் சந்திக்கிறார்கள் என்பதை காமெடிகதையாக உருவாக்கி உள்ளது.
-பவானி கார்த்திக்