பித்தப்பை கல் எளிதில் நீங்க சில டிப்ஸ்..!
பித்தப்பை என்பது நமது உடலில் கல்லீரலில் ஒரு பகுதியுடன் பேரிக்காய் வடிவில் சுமாராக 8செ.மீ. நீளமும் 4செ.மீ. அகலமும் கொண்ட ஒரு உறுப்பு. நாம் சாப்பிடும் உணவை ஜீரணம் செய்ய உதவும் பித்த நீரை சேமித்து வைக்கும் உறுப்பு பித்தப்பை அதாவது, ஒரு வேளை சாப்பிட்டு, அடுத்த வேளை உணவு உண்பதற்கு இடைப்பட்ட நேரத்தில் இந்த பித்தப்பை ஜீரணத்திற்குத் தேவையான ஜீரண நீரை சேமித்து வைக்கும்.
நாம் உணவு உண்டதும், இந்த பித்தப்பை சுருங்குகிறது. இதனால் பையில் இருக்கும் ஜீரண நீர் இரைப்பைக்குச் சென்று உணவு செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது. இப்படி பித்தப்பை சுருங்கி விரியமால் போனால் பித்தப் பையில் உண்டாகும் ஜீரண நீர் கற்களாக மாறும் வாய்ப்புள்ளது.
ஒருவருடைய பித்தப்பையில் கற்கள் உண்டானால் பசிகாதபோது சிறிது சாப்பிட்டாலே அவர்கள் வயிறு வீங்கி விடும். மேலும் சாப்பிட்ட உணவு செரிமானமாகாமல் நெஞ்செரிச்சல், புளியேப்பம் போன்ற பல பிரச்சினைகள் தோன்றும். பொதுவாக நம்தவறான வாழ்க்கை முறையினால் எந்த வயதினருக்கும் பித்தப்பையில் கற்கள் உண்டாகலாம். ஆனால் பெண்கள் தான் அதிகம் பாதிப்படைகிறார்கள்.
பித்தப்பையில் கற்கள் (Gallstones) அதிகபடியான மாத்திரைகளை உட்கொள்பவர்கள், கொழுப்புவகை உணவுகளை அதிகம் உண்பவர்கள், கருத்தடை மாத்திரை அதிகம் உபயோகிப்பவர்களுக்கு பித்தப்பை கல் உருவாகும் வாய்ப்பு மிக மிக அதிகம்.
மேலும், இரத்த சிவப்பணுக்கள் சுழற்சி மிக விரைவாக உள்ளவர்கள், இரத்தசோகை நோய் இருப்பவர்கள், செக்ஸ் ஹார்மோன் மாற்றங்கள், உணவுமண்டலத்தில் பாக்டீரியா( அ) குடல் புழுக்கள் மற்றும் டைபாயிடு போன்ற நோய் கிருமி பாதிப்புக்குள்ளானவர்கள், குடல் புண்ணால் பாதிப்பு உள்ளவர்கள், கிட்னி, கல்லீரல் போன்ற உறுப்புகள் பாதிக்கப்பட்டவர்கள், புற்றுநோய் உள்ளவர்கள் போன்றோருக்கும் பித்தப் பையில் கற்கள் எளிதில் உண்டாகின்றன.
– வீர பெருமாள் வீர விநாயகம்