தாய்ப்பால் சுரக்க சில டிப்ஸ்..!!
குழந்தை பிறந்த பின் அவர்களுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டியது, அம்மக்களின் கடமை. தாய்ப்பால் ஆரோக்கியமிக்க ஒன்று, ஒரு சிலருக்கு தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்கும். அவை இன்னும் அதிகமாக சுரக்க சில டிப்ஸ் பற்றி பார்க்கலாம்.
வெந்தயம் : தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க வெந்தயத்தை கஷாயம் வைத்துக் குடிக்கலாம். இது தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்வது மட்டுமின்றி குழந்தையின் உடல் எடை அதிகரிக்கவும் செய்கிறது.
வெந்தய கசாயம் செய்முறை :
* ஒரு ஸ்பூன் வெந்தயத்தை, 2 கப் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும் ஒரு கப் அளவிற்கு வந்தவுடன் அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடிக்கலாம்.
* ஒரு ஸ்பூன் வெந்தயத்தை எடுத்து காட்டன் துணியை தண்ணீரில் நனைத்து அதில் வெந்தயத்தை வைத்து சூரிய ஒளி படும் இடத்தில் கட்டி விட வேண்டும். மறுநாள் காலை எடுத்துபார்த்தால் அதில் முளைகட்டி இருக்கும்.
* முளைக்கட்டிய வெந்தயத்தை எடுத்து, தேனில் கலந்து சாப்பிடலாம். அல்லது
* வெந்தயத்தை பொடி செய்து, நன்கு அரைத்து அதை தேனில் குழைத்து சாப்பிடலாம்.
மேலும் இதுபோன்ற பல பெண்கள் குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ. லோகேஸ்வரி.
Discussion about this post