பிரசவத்திற்கு பின் வயிற்றை சுற்றி ஏற்படும் தழும்பை சரி செய்ய முடியுமா..?
கரப்பான முதல் மாதத்தில் இருந்தே கரு மீது, அக்கறை காட்ட தொடங்கி விடுவார்கள். குழந்தை பிறந்த பின் வயிற்றை சுற்றி ஏற்படும் தழும்பை நினைத்து ஒரு சில பெண்கள் கவலை கொள்ளுவார்கள்.
அந்த தழும்பை சரி செய்ய.., குழந்தை பிறந்த பின் முதல் மாதத்தில் இருந்தே தொடங்கி விடலாம். தரமான மாய்ஸ்ரைசரை வயிற்றை சுற்றி தடவி விட வேண்டும். கண்ட கண்ட எண்ணெய் மற்றும் கீரிம்களை பயன்படுத்தக் கூடாது.
கர்ப்பகாலத்தில் குழந்தை வயிற்றில் இருக்கும் பொழுது, கரு வளர வளர.., வயிற்றின் தளும்பும் வளர்ந்து கொண்டே போகும்.
அந்த சமயத்தில் சிலருக்கு அரிப்பு ஏற்படும். அரிப்பு ஏற்படும் பொழுது சீப்பு வைத்து அதை சொரியக்கூடாது. தழும்பை சரி செய்ய கீரிம் அல்லது மாய்ஸ்ட்ரைசர் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும்.
எண்ணெய் பயன்படுத்தக் கூடாது. எண்ணெய் அதிகம் பயன்படுத்தினால் சருமம் அதிகம் பாதிக்க கூடும்.
மேலும் இதுபோன்ற பல பெண்கள் குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
வெ.லோகேஸ்வரி
Discussion about this post