ஒட்டன்சத்திரத்தில் பெண் தவறவிட்ட 5 பவுன் நகையை ஆட்டோ ஓட்டுநர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தங்கச்சியம்மாபட்டி பகுதியைச் சேர்ந்த காளிமுத்து என்பவருடைய மனைவி பிருந்தா என்பவர் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து தங்கச்சியாம்பட்டி நோக்கி செல்வதற்காக தனது குழந்தையுடன் கையில் கட்டப்பை வைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தாராபுரம் சாலையில் சென்று கொண்டிருக்கும்போது கையில் இருந்து கட்டப்பை தவறி சாலையில் விழுந்துள்ளது.
பின்னர் இருசக்கர வாகனத்தில் சிறிது தூரம் சென்று விட்டு பார்த்த போது தான் வைத்திருந்த இருந்த ஐந்து பவுன் நகை காணாததை கண்டு அதிர்ச்சடைந்து உடனடியாக இது குறித்து ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்தார் இந்நிலையில் புகார் அளிக்க வந்த ஒரு சில நிமிடத்திற்குள் ஒட்டன்சத்திரம் ஏபிபி நகர் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்ற 60 வயதான முதியவர் தவறவிட்ட நகையை எடுத்துக்கொண்டு ஒட்டன்சத்திரம் காவல் துணை கண்காணிப்பாளர் முருகேசன் முன்னிலையில் ஒப்படைத்தார்.
இந்த நிலையில் காணாமல் போன நகையை ஆட்டோ ஓட்டுநர் காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது மேலும் நேர்மையாக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுனருக்கு டிஎஸ்பி முருகேசன் அவர்கள் பொன்னாடை போர்த்தியும் அன்பளிப்பு வழங்கியும் கௌரவித்தார்.
Discussion about this post