பால் நீண்ட நேரம் கெடாமல் இருக்க இது போதுமா..!
பஜ்ஜி செய்யும்போது பஜ்ஜி மாவில் ஒரு கரண்டி இட்லி மாவு கலந்து பஜ்ஜி சுட்டால் நன்றாக உப்பி வரும்.
வெங்காய பஜ்ஜிக்கு வெங்காயத்தின் தோலை உரிக்காமல் வட்டமாக நறுக்கிய பின் தோலை எடுத்தால் வெங்காயம் பிரியாமல் வட்டமாக வரும்.
வீட்டின் தரையை துடைக்கும்போது தண்ணீரில் சிறிது வினிகர், எலுமிச்சை சாறு கலந்து துடைத்தால் தரை நன்றாக பளிச்சென மாறும்.
காபி போடும்போது பில்டரில் சிறிது சர்க்கரை சேர்த்து பின் காபி பவுடர் போட்டு டிகாஷன் போட காபி அருமையாக இருக்கும்.
வாழைத்தண்டு கூட்டு மற்றும் பொரியல் செய்யும்போது அதில் சிறிது முருங்கைக்கீரை சேர்த்து செய்ய சுவை அருமையாக இருக்கும்.
பாதாம் பிசினை நீரில் ஊற வைத்து அதனை சாப்பிட உடலில் சூடு குறையும்.
பால் காய்ச்சும்போது பாலில் ஒரு ஏலக்காய் தட்டி சேர்க்க பால் நீண்ட நேரம் கெடாமல் இருக்கும்.
உருளைக்கிழங்கு வேகவைத்த நீரில் பாத்திரங்கள் கழுவினால் நன்றாக பளப்பளப்பாக இருக்கும்.
சப்பாத்திக்கோ பூரிக்கோ மாவு பிசையும்போது அதில் சாதம் வடித்த நீரை சேர்த்து பிசைந்தால் அது மிகவும் சுவையாக இருக்கும்.
வத்தல் போட கூழ் காய்ச்சும்போது அதில் கொஞ்சமாக பெருஞ்சீரகம் சேர்த்து காய்ச்சி வத்தல் பொரிக்க நல்லா வாசனையாக இருக்கும்.
கருணைக்கிழங்கு இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்தால் மட்டுமே அது நல்ல கருணைக்கிழங்கு, சீக்கிரமாகவும் வெந்துவிடும்.
பாகற்காய் மற்றும் வெந்தயக்கீரை சமைக்கும்போது அதில் சிறிது வெல்லம் சேர்த்து சமைக்க கசப்பு தன்மை இருக்காது.
