வினைகளை தீர்க்கும் சஷ்டி விரதம்…!! குழந்தை வரம் கிடைக்க இதை செய்ய மறக்காதீங்க…!!
எந்த வினையாக இருந்தாலும் கந்தன் அருள் இருந்தால்.., வந்த வினையெல்லாம் விலகி விடும் என்று சொல்லுவார்கள். முருகருக்கு பல விரதங்கள் இருந்தாலும் முக்கியமானதாக சொல்லப்படுவது கந்த சஷ்டிவிரதம் தான்.
கந்தசஷ்டி விரதத்தை பல முனிவர்களும், தேவர்களும் இருந்த விரதம், சுப்பிரமணியருடைய மாலா மந்திரத்தில், சஷ்டி ப்ரியாய மந்திரம் இடம்பெரும். சஷ்டி என்பது திதி விருப்பமுள்ளவன் என்றும், சஷ்டி தேவியை விரும்புபவன் என்றும் பெயர்.
இருப்பினும் சஷ்டி விரதத்தில் பலருக்கும் சந்தேகங்கள் இருக்கும்., அதாவது ஒரு மாதத்தில் எத்தனை சஷ்டி விரதம் இருக்க வேண்டும் என அதை பற்றி விரிவாக படிக்கலாம்..
சஷ்டி விரதத்தை ஏழு நாட்கள் இருக்கலாம்
இந்த ஐப்பசி மாதத்தின் ஆரம்பத்திலேயே , சஷ்டி துவங்கி இருப்பதால்., இன்றைய நாளில் இருந்து தொடர்ந்து 7 நாட்கள் விரதம் இருப்பது இன்னும் சிறந்த பலன்களை கொடுக்கும்..
நாளை சஷ்டி சப்தமி. அதாவது வள்ளி-தெய்வசேனா சமேத முருகப் பெருமானுக்கு திருக்கல்யாணம் நடைபெறும்.
இன்றைய நாளில் கந்தசஷ்டி விரதத்தை நிறைவு செய்தால் சிறந்த பலன்கள் கிடைக்கும்.
சஷ்டி விரதம் இருப்பது எப்படி என்று பார்க்கலாம் :
சஷ்டி நாளில் காலை முதல் மாலை வரை அசைவம் சாப்பிடாமல் விரதம் இருந்து, காலை மாலை கந்த சஷ்டி கவசம் படிக்க வேண்டும். காலை, மாலை வீட்டில் விளக்கு ஏற்றி தீப ஆராதனை செய்ய வேண்டும்.
முருகர் கோவிலுக்கு சென்று வழிபடுவது இன்னும் சிறந்தது.., ஒவ்வொரு சஷ்டி அன்றும் இந்த விரதத்தை கடைபிடிக்கலாம், சஷ்டி விரதம் இருக்கும்..
பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும்.
குழந்தை இல்லாத தம்பதிகள் இருவரும் சேர்ந்து, விரதம் இருந்தால் விரைவில் திருமணம் ஆகும்.
சஷ்டிவிரதம் இருக்கும் பக்தர்களுக்கு, முருகர் என்றும் துணை நிற்பார்.
இந்த பூஜையை நாம் மாலை நேரத்திலும் இருக்கலாம்., அதாவது மாலை 6 மணி முதல் இரவு 9 மணிக்குள்ளாக பண்ண வேண்டும்.., குறிப்பாக பெண்கள் மாலை நேரத்தில் பூஜை அறையில் அமர்ந்து முருகரின் திருவுருவ படத்திற்கு வண்ண பூக்களால் அலங்கரித்து குங்குமம் மஞ்சள் வைத்து அலங்கரிக்க வேண்டும்.
அதன் பின் முருகருக்கு முன்னாக அமர்ந்து கிழக்கு முகம் பார்த்தவாரு நெய் தீபம் ஏற்ற வேண்டும்.,
ஆனால் இந்த பூஜையை செய்யும் பக்தர்கள் வடக்கு திசை பார்த்து அமர வேண்டும்..
அமர்ந்து 108 முறை “ஓம் சரவண பவ” எனும் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்..
அதன் பின் 108 முறை “ஓம் சரவண பவ” எனும் மந்திரத்தை எழுத வேண்டும்..
அப்படி செய்தால் நாம் நினைத்த செயல் நிறைவேறும், இந்த மந்திரத்தை உச்சரிக்கும் போது அல்லது எழுதும் போது ராவுகாலம், எமகண்டம் பார்த்து செய்ய வேண்டும்..
இந்த விரதத்தை பெரும்பாலும் குழந்தை வரம் இல்லாதவர்கள் இருப்பார்கள்., இன்றைய நாளில் குழந்தை வரம் இல்லாத தம்பதிகள் விரதம் இருந்தால் முருகன் அருள் கிடைக்கும் என சொல்லுவார்கள்..
அதேசமயம் குழந்தைக்காக விரதம் இருப்பவர்கள் மிளகு, துளசி, பால், மற்றும் பழங்கள் மட்டுமே சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.
ஒரு சிலருக்கு சாப்பிடாமல் விரதம் இருந்தால் உடல் நலம் பாதிக்கும் என நினைபவர்கள்., உணவு எடுத்துகொள்ளலாம்..,
ஆனால் அசைவ உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும்…
சஷ்டி விரதத்தை பொறுத்த வரையில் விரதம் இருப்பது முக்கியமல்ல., முருகன் மீது முழு நம்பிக்கையுடன் தீராத பக்தியுடன் வழிபட்டாலே போதும் என சொல்லபடுகிறது…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..