உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக களத்தில் மதிமுகம்…!!
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பட்டாசு வெடிப்பின் போது எந்த விதமான அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்கவும் பட்டாசு வெடிக்கும் சமயத்தில் பாதுகாப்பாக இருக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் தெற்கு தீயணைப்புத் துறையினர் பயணிகளுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா தலைமையில் பணியின் போது உயிர்த்த 213 காவலர்களுக்கான வீரவணக்கம் நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் காவலர்கள் 63 குண்டுகள் முழங்க மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். மேலும் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட உட்கோட்ட மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் காவலர்கள், என அனைவரும் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் ஹார்ட் ஃபுல்னஸ் சர்வதேச பள்ளி திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் பேசிய ஸ்ரீராம் சந்திரா மிஷன் தலைவர் தாஜி 140 ஏக்கர் பரப்பளவில், தொழில்நுட்ப வசதிகளின் கூடிய வகுப்பறைகள், , கல்வி மற்றும் கணித மையங்கள், யோகா, உள்ளிட்ட பல முன்னேற்ற வசதிகளைக் கொண்டுள்ளதாகவும், தேசிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை எழுத்தறிவு மற்றும் கணிதத் திறன்கள் மையமாக கொண்டு செயல்படுவதாகவும் தெரிவித்தனர்.இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்கள் கல்வியாளர்கள் பெற்றோர்கள் மற்றும் நலம் விரும்பிகள் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்டம், புதிய பேருந்து நிலையம் எதிரில் டாடா நிறுவனமான தனிஷ்க் நகைக்கடையின் இரண்டாவது ஷோரும் மிக பிரம்மாண்டமாக மூன்றடுக்கு மாடிகளுடன் திறக்கப்பட்டது. இதனை டைட்டன் கம்பெனி இணை துணை தலைவர் ஷரத் திறந்து வைத்தார். அவருடன் நிர்வாகிகள் சரவணன் மற்றும் சர்கிள் மேலாளர் தினேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் ரோட்டரி சங்கத்தின் பொன்விழா ஆண்டு முன்னிட்டு ரோட்டரி சங்கம் மற்றும் சென்னை சிம்ஸ் மருத்துவமனை இணைந்து இலவச சிறப்பு மருத்துவ முகாமை நடத்தினர். இதற்கு அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை கமாண்டர் திருமலை தொடங்கி வைத்தார். இதில் இருதய நோய், எலும்பு நோய் மருத்துவம், மகளிர் மருத்துவம், சிறுநீரகம், பொது மருத்துவம், ஆகியவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் சங்கடஹார சதுர்த்தியை முன்னிட்டு ஸ்ரீ விநாயகபெருமானுக்கு பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு நடைப்பெற்ற பரதநாட்டிய நிகழ்ச்சியை பக்தர்கள் கண்டு ரசித்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நேதாஜி சாலையில் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி பேசிய மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ராம்கிர் மகராஜ் மற்றும் உத்திரபிரதேசத்தை சேர்ந்த நரசிங் ஆனந்த் ஆகிய இருவரை உடனடியாக கைது செய்யக்கோரி சுமார் 1500க்கும் மேற்பட்ட அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பினர் கண்டன கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..