தீராத நோயும் தீர்க்கும் சிவன் விபூதி வழிபாடு…!! 48 நாட்களில் நிகழும் அதிசயம்..!!
எவ்வளவு தான் ஒருசிலர் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொண்டாலும் சில சமயங்களில் அவர்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு கொண்டு தான் இருக்கும்., எவ்வளவு வைத்தியம் பார்த்தாலும் அவை தீர்வதே இல்லை..
அப்படி மருந்து மாத்திரை சாப்பிட்டும் நோய் குணமாகவில்லையே என கவலை படுபவர்கள் தங்களின் அடுத்த நம்பிக்கையாக வேண்டுவது கடவுளை மட்டுமே., அந்த சமயத்தில் தன்மைபிக்கையோடு சேர்த்து இறை நம்பிக்கையும் வைத்தால் அதற்கான தீர்வுகள் கிடைக்கும்..
அப்படி தீராத நோய்களையும் தீர்க்கும் சிவனின் விபூதி வழிபாடு பற்றி தான் இதில் பார்க்க போகிறோம்.
சிவனின் சொத்து என்று பக்தர்களால் அழைக்கப்படும் விபூதி வழிப்பாட்டை வீட்டிலேயே செய்து வழிபடலாம்..
முன்னதாக இந்த வழிபாட்டிற்கு தேவையானவற்றை பார்க்கலாம்..
* பசுவின் சாணத்தால் செய்யப்பட்ட விபூதி, வில்வ இலை மற்றும் வெற்றிலை வேண்டும்.
* சிவபெருமானுக்கு மிகவும் உகுந்த நாளாக சொல்லப்படும் திங்கள் கிழமை, பிரதோஷ நாள், சிவராத்திரி நாட்கள் அல்லது பிரம்ம முகூர்த்த நேரத்தில் மட்டுமே செய்ய வேண்டும்..
* மேற்கண்ட நாளில் வழிபாடு செய்ய நினைபவர்கள் காலையில் சுத்தமாக குளித்து பூஜை அறையில் விளக்கு ஏற்ற வேண்டும்.
* அதன் பின்னர் சிவன் படத்திற்கு முன்னதாகவோ அல்லது லிங்கத்தின் முன்னரோ ஒரு தாம்புலத்தட்டில் வில்வ இலைகளை பரப்பிய படி வைக்க வேண்டும்.
* அதன் பின்னர் அந்த வில்வ இலைகளுக்கு மேல் ஒரு வெற்றிலையை வைத்து “ஓம் ருத்ராய நமஹ” என்ற மந்திரத்தை உச்சரித்தவாறே விபூதியால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
* முக்கியமாக 108 முறை அந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்..
* இந்த வழிபாட்டை தொடங்கிய நாளில் இருந்து தொடர்ந்து 48 நாட்கள் செய்ய வேண்டும்..
* ஒவ்வொரு நாளும் பூஜை செய்யும் ரிபூதியை தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்..
* அப்படி பூஜை செய்த அந்த ரிபூதியை நோய் வயப்பட்ட இடங்களில் பூச வேண்டும்…
* அந்த ரிபூதியை நாம் குடிக்கும் தண்ணீரிலும் போட்டு குடிக்கலாம்.. அவை இன்னும் சிறந்தது..
இந்த விபூதி வழிபாட்டை தொடர்ந்து 48 நாட்கள் முழு மனதோட செய்ய வேண்டும்..
முக்கிய குறிப்பு இந்த விபூதி வழிபாட்டில் நம்பிக்கை இல்லாதவர்கள்.., உங்களுக்கான நோய்களை மருத்துவர்களிடமே பார்த்துக்கொள்ளலாம்.., இவை கட்டாயம் அல்ல..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..