உலகில் மிகவும் பிரபலமான விளையாட்டான கால்பந்து விளையாட்டின் உலகக்கோப்பை தொடர் கத்தாரில் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடந்த லீக் சுற்றில் அர்ஜென்டினா அணியை சவுதி அரேபியா அணி வீழ்த்தி உலகம் முழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்தியது இதை தொடர்ந்து சவுதி அரேபியா அணி இன்று ஒரு நாள் அணைத்து பள்ளி,கலோரிகள் மற்றும் அரசு தனியார் நிறுவங்களுக்கு விடுமுறை அளித்து கொண்டாடுகிறது.
நேற்று தனது முதல் ஆட்டத்தை தொடங்கிய அர்ஜென்டினா அணி இந்த உலக கோப்பை தொடரில் கோப்பையை வெல்லும் அணியாக இருக்கும் என்று பலர் கூறிவந்த நிலையில் நேற்று சவுதி அரேபியா விடம் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது. உலக புகழ் பெற்ற மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி சவுதி அரேபியா அணியுடன் மோதியது ஆட்டத்தின் 10வது நிமிடத்தில் நட்சத்திர வீரர் மெஸ்ஸி பெனால்டி முறைப்படி முதல் கோல் அடித்தார். மறுபுறம் சவுதி அரேபியா அணி தனது முதல் கோலை எடுக்க பல முயற்ச்சிகளை செய்தது.
ஆட்டத்தின் முதல் பாதியில் அர்ஜென்டினா 1 சவுதி அரேபியா 0 என்ற நிலையில் இரண்டாம் பாதி தொடங்கியது சௌதி அரேபியாவின் வீரர் சலே அல்ஷெரி 48வது நிமிடத்தில் கோல் எடுத்து ஆட்டத்தை சமன் செய்தார் அதைத்தொடர்ந்து சலேம் அல்தாவசாரி 53வது நிமிடத்திலும் கோல் அடித்தார். இதனால் அர்ஜென்டினா அணி பின்னிலை அடைந்தது ஆட்டத்தின் கடைசி வரை கோல் ஏதும் எடுக்காததால் ஒத்தி அரேபியாவிடம் அர்ஜென்டினா அதிர்ச்சி தோல்வி அடைந்து உலக விளையாட்டு ரசிகர்கள் அனைவர்க்கும் அதிர்ச்சியை அளித்தது.
இதைத்தொடர்ந்து அர்ஜென்டினா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றதால் அந்நாட்டின் கால்பந்து ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரும் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர் இதனால் சௌதி அரேபியா அந்நாட்டிற்கு பொது விடுமுறை அளித்து வெற்றியை கொண்டாடி வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு முதல் இதுவரை 36 போட்டிகளில் தொடர்ச்சியா வெற்றி பெற்றிருந்த க அர்ஜென்டினா அணி முதல் முறையாக தோல்வியை சந்தித்துள்ளது.
Discussion about this post