உலகின் மிக பெரிய பணக்காரர்களின் ஒருவரான எலான் மஸ்க் தனக்கு சொந்தமாக பல நிறுவங்களை வைத்துள்ளார். அதில் ஒன்றான டெஸ்லா நிறுவனம், 3.21 லட்சம் மின்சார கார்களை பழுது நீக்குவதற்காக திரும்பப் பெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கும் டிவிட்டர் நிறுவனத்தை எலன் மஸ்க் வாங்கி அதில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு அதை மீட்டெடுக்க முயற்சி செய்து வறுகிறார். இந்நிலையில் புதிய சிக்கல் அவருக்கு புதிய சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது. டெஸ்லா கார் நிறுவனம் தயாரித்துள்ள மாடல் 3 மற்றும் மாடல் ஒய் ரக மின்சார கார்களில் பழுதுகள் ஏற்பட்டுள்ளது கண்டறிந்துள்ளனர். இதனால் காரை இயக்க தொடங்கிய பிறகு பின்பக்க விளக்குகள் சரியாக செயல்படவில்லை என்று காரில் தவறான சென்சார் பொருத்தப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதை சரி செய்ய 3.21 லட்சம் மின்சார டெஸ்லா கார்களை திரும்பப் பெற்று அதில் புதிய சாப்ட்வேர் மூலம் அந்த பிரச்சனைகளை சரி செய்யபடும் என்று அறிவித்துள்ளது. இதைப் பற்றிய அறிக்கையை டெஸ்லா நிறுவனம், அமெரிக்க தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு ஆணையத்திடம் சமர்பித்துள்ளது.