ராணிப்பேட்டையில் கோலாகலமாக நடைபெற்ற கிராமிய விளையாட்டு போட்டிகள்..!!
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அரசு பள்ளியில் தென்னிந்திய மண்டல அளவிலான ஈஷா கிராமிய விளையாட்டு போட்டி நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தென்னிந்திய மண்டல அளவிலான ஈஷா கிராமோத்சவம் எனும் கிராமிய விளையாட்டு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த கிராமிய போட்டியில் செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், புதுச்சேரி, விழுப்புரம், உள்ளிட்ட 10 மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இதில் ஆண்களுக்கான வாலிபால் போட்டியும் பெண்களுக்கு த்ரோபால் போட்டி மற்றும் இரு பாலருக்கான கபடி போட்டிகள் நடைபெற்றது.
தொடர்ந்து, இறுதி போட்டிகளின் பங்கேற்ற விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் அனைவருக்கும், வரும் 23ம் தேதி கோவை ஈஷா ஆதியோகி முன்பு நடைபெறும் விழாவில், வெற்றி பெறும் அணிகளுக்கு ஆதியோகி சத்குரு பரிசு வழங்கி கவுரவிக்க உள்ளனர்.
நிகழ்ச்சியை தொடர்ந்து, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
Discussion about this post