திருபத்தூரில் தொடரும் பைக் திருட்டு..!! உஷார் மக்களே..!!
திருப்பத்தூர் மாவட்டம் கொரட்டி பகுதியில் வங்கி அருகில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் அடுத்த செவத்தூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் சில தினங்களுக்கு முன்பு கொரட்டி பகுதியில் உள்ள வங்கிக்கு சென்றார். அப்போது வங்கியின் வெளியே தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வங்கியில் உள்ள வேலைகளை முடித்துக் கொண்டு வெளியே வந்து பார்த்த போது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்க வாகனம் காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இந்த சம்பவம் குறித்து அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் அருகில் இருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போது, மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து, காவல் துறையினர் வழக்குபதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் வங்கி முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post