நீங்களும் சமையல் ராணி ஆகலாம்..!
பரோட்டாவிற்கு மாவு பிசையும்போது தண்ணீர் ஊற்றி பிசையாமல் சோடா ஊற்றி பிசைந்தால் பரோட்டா மிருதுவாக இருக்கும்.
சேமியா பாயாசத்தில் பால் பாதியும் தேங்காய் பால் பாதியும் சேர்த்து செய்தால் பாயாசம் சுவையாக இருக்கும்.
அரைத்த இஞ்சி பூண்டு நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்க ஒரு ஸ்பூன் சூடான நீரை கலந்து பிரிஜ்ஜில் வைக்கலாம்.
கிழங்கு வகைகளை வேகவைக்கும்போது சீக்கிரமாக வேக அதனை 10 நிமிடம் உப்பு கலந்த நீரில் ஊறவைத்து பின் வேகவைக்கலாம்.
எலுமிச்சை சாதம் செய்யும்போது ஒரு ஸ்பூன் தேங்காய் துருவலை வதக்கி சேர்க்க நல்ல சுவையாக இருக்கும்.
தர்பூசணி தோலை கீழே எரியாமல் அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதில் மிளகுத்தூள் அல்லது மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து எண்ணெய் விட்டு வறுக்கலாம்.
நெத்திலி குழம்பில் புளி சேர்ப்பதற்கு பதிலாக தக்காளி சேர்த்து செய்தால் நல்லா வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும்.
சுவரொட்டியை சூடான் நீரில் 5 நிமிடங்களுக்கு போட்டு வைத்து பின் சுத்தம் செய்தால் அதன் மேலே உள்ள தோல் ஈசியாக வரும்.
உலர் திராட்சையை காற்று புகாத பாட்டிலி போட்டுவைத்து ஃபிரிஜ்ஜில் வைத்தால் நீண்ட நாட்களுக்கு நன்றாக இருக்கும்.
துணியில் இருக்கும் எண்ணெய் கறை நீங்க எலுமிச்சை பழத்தை நறுக்கி அதில் உப்பு கலந்து கறை உள்ள இடத்தில் தேய்த்தால் கறை நீங்கிவிடும்.
பச்சை பட்டாணியை வேகவைக்கும்போது அதில் ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து வேகவைக்க சுவை அதிகமாக இருக்கும்.