தவிர்க்கப்பட்ட விபத்து..!! மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா நிறுவனம்..!!
நேற்று மாலை திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நடுவானில் சென்று கொண்டிருந்த போது இயந்திரக்கோளாறு ஏற்பட்டு நடுவானில் வட்டமடிதுள்ளது
நேற்று மாலை 5:30 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹர்ஜாவிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 140 பயணிகளுடன் புறப்பட்டது.. புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானத்தில் ஹைட்ராலிக் பாகத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறின் காரணமாக கியர் அமைப்பில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது..
சுமார் 4000 அடிக்கு மேல் பறந்து கொண்டிருந்த விமானத்தில் ஏற்பட்ட இந்த பிரச்சனையால் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக விமானத்தை தரையிறக்க முடியாமல் வானில் வட்டமடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது..
இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின் Pilot-கள் விமானத்தை தரையிறக்கி பத்திரமாக பயணிகளை மீட்டனர்.. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது..
இந்நிலையில் விமானம் சீக்கிரம் தரை இறக்கபடாதது ஏன் என்பது குறித்து ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது என தெரியவந்ததும்.. வானில் வரையறுக்கப்பட்டுள்ள பரப்பில் பலமுறை விமானம் வட்டமடிக்கப்பட்டது..
இதனால் விமானத்தில் உள்ள எரிபொருள்கள் சீக்கிரம் காலியாகி அதன் எடை குறைந்து விமானம் தரையிறக்க முடியும்.., அப்படி செய்யா விட்டால் மட்டுமே விபத்துகள் நேரிடும்..
மேலும் இந்த விபத்து ஏற்பட்டது ஏன் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.. அதே சமயம் பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.. பயணிகள் சிரமத்திற்கு நிர்வாகம் சார்பில் மன்னிப்பு கேட்டுகொள்கிறோம் என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..