காய்கறி இல்லனா இந்த குழம்பு செய்ங்க… மிளகு குழம்பு..!
மசாலா விழுது அரைக்க:
எண்ணெய் – 1 தேக்கரண்டி
தனியா – 2 மேசைக்கரண்டி
கடலை பருப்பு – 1 மேசைக்கரண்டி
பச்சரிசி – 1 மேசைக்கரண்டி
மிளகு – 3 மேசைக்கரண்டி
பூண்டு – 2 பற்கள்
கறிவேப்பிலை
காய்ந்த மிளகாய் – 5
தன்ணீர்
நல்லெண்ணெய் – 4 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – 1/4 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் – 1கப்
பூண்டு – 1/4 கப்
கறிவேப்பிலை
புளி தண்ணீர்
மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
உப்பு – தேவையானவை
வெல்லம் – 2 தேக்கரண்டி
வாணலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தனியா,கடலை பருப்பு,பச்சரிசி,மிளகு சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
பின் அத்துடன் பூண்டு,கறிவேப்பிலை,காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
ஆறவைத்து பின் அனைத்தையும் நன்றாக விழுது போல் அரைக்கவும்.
புளியை நன்றாக கரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலை அடுப்பில் வைத்து நல்லெண்னெய் ஊற்றி சூடானதும் கடுகு,வெந்தயம் மற்றும் சீரகம் சேர்க்கவும்.
பின் பெருங்காயத்தூள், சின்ன வெங்காயம்,பூண்டு,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பின் புளி தண்ணீரை அதில் ஊற்றவும். மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
பின் அரைத்த விழுது ,தண்ணீர்,வெல்லம் ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விடவும்.
அவ்வளவு தான் ஆரோக்கியமான மிளகு குழம்பு தயார்.