ஆரோக்கியமான ராகி பச்சைப்பயிறு தோசை..! காலை உணவு..!
ராகி – 1 கப்
பச்சைபயிறு – 1/2 கப்
உளுத்தம் பருப்பு – 1/4 கப்
இஞ்சி – 1 துண்டு நறுக்கியது
பச்சை மிளகாய் – 4 நறுக்கியது
சீரகம் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையானவை
தண்ணீர்
நெய்
ராகி,பச்சைப்பயிறு,உளுத்தம்பருப்பு ஆகியவற்றை சுத்தம் செய்து நீர் நிரப்பி 4 மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும்.
ஒரு மிக்ஸியில் அத்துடன் இஞ்சி,பச்சை மிளகாய்,சீரகம் உப்பு ஆகியவற்ரை போட்டு அரைக்கவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து கரண்டி மாவை ஊற்றி தோசை தேய்த்து நெய் விட்டு இரண்டு பக்கமும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
அவ்வளவுதான் ஹெல்தியான ராகி பச்சைபயிறு தோசை தயார்.
இத்துடன் காரசட்னி மற்றும் தேங்காய் சட்னி அட்டகாசமாக இருக்கும்.