மிளகாய் சட்னி..!
தேவையான பொருட்கள்:
மிளகாய் வற்றல் 10
பூண்டு 3 பற்கள்
சின்ன வெங்காயம் 2
புளி சின்ன துண்டு
உளுந்து 1 ஸ்பூன்
கடுகு 1 ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிது
நல்லெண்ணெய் தேவையானது
செய்முறை:
காய்ந்த மிளகாயை ஒரு பாத்திரத்தில் சேர்த்து தண்ணீர் ஊற்றி அரை மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும்.
ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த மிளகாய், புளி, பூண்டு, சின்ன வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்த விழுதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும்.
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து பின் கறிவேப்பிலை சேர்த்து பொரித்து அதனை அரைத்த சட்னியில் சேர்க்கவும்.
அனைத்தையும் கலந்து விட வேண்டும்.
சாப்பிடும்போது உங்களுக்கு காரம் அதிகமாக இருந்தால் நல்லெண்ணெய் சேர்த்து கலந்து சாப்பிடலாம், காரம் தெரியாது.
அவ்வளவுதான் காரசாரமான கார சட்னி தயார்.