டேஸ்டான சிக்கன் நக்கட்ஸ்…!
எலும்பில்லாத சிக்கன் 250 கிராம்
பூண்டு பொடி கால் ஸ்பூன்
மைதா 2 ஸ்பூன்
பிரட் துண்டு
இட்டாலியன் சீசனிங் 2 ஸ்பூன்
சில்லி ஃபிளேக்ஸ் 2 ஸ்பூன்
முட்டை 1
எண்ணெய்
உப்பு
மிளகுத்தூள்
சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு உப்பு,மிளகுத்தூள்,பூண்டு தூள்,மைதா சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.
பிரட்டை டோஸ்ட் செய்து அதனை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். அரைத்த பொடியுடன் இட்டாலியன் சீசனிங்,சில்லி ஃபிளேக்ஸ் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
ஒரு சின்ன கிண்ணத்தில் முட்டை ஊற்றி அடித்துக் கொள்ளவும்.
சிக்கன் துண்டை ஒவ்வொன்றாக முட்டை கலவை அதற்கு பின் பிரட் தூளில் முக்கி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்துக் கொள்ளவும்.
அவ்வளவுதான் சிக்கன் நக்கட்ஸ் தயார்.