ஆரோக்கியமான ‘பீட்ரூட் சப்பாத்தி’ இன்னிக்கு செய்யலாமா..!
பீட்ரூட் 1 துருவியது
கோதுமை மாவு 2 கப்
உப்பு தேவையானது
சில்லி பிளேக்ஸ் 1 ஸ்பூன்
சீரகத்தூள் 1 ஸ்பூன்
கரம் மசாலா தூள் 1 ஸ்பூன்
கசூரி மேத்தி 2 ஸ்பூன்
ஓமம் 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் 4 நறுக்கியது
இஞ்சி 1 துண்டு நறுக்கியது
எண்ணெய்
நெய்
தண்ணீர்
மிக்ஸியில் மிளகாய்,இஞ்சி,பீட்ரூட் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
கோதுமை மாவு,உப்பு,மிளகாய்த்தூள்,சீரகத்தூள்,கரம் மசாலா,கசூரி மேத்தி,ஓமம் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
இதில் அரைத்த விழுதை சேர்த்து நன்றாக பிசையவும்.
இதனை அரை மணி நேரத்திற்கு ஊற வைத்து பின் சிறு சிறு உருண்டைகளாக பிடித்து சப்பாத்தி தேய்த்துக் கொள்ளவும்.
சப்பாத்தி கல்லை அடுப்பில் வைத்து நெய் தடவி இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.
அவ்வளவுதான் ஆரோக்கியமான பீட்ரூட் சப்பாத்தி சூடாக தயார் ஆகிவிட்டது.
