பசங்களுக்கு மட்டன் எலும்பு சாறு இப்படி செய்து குடுங்க…!
மட்டன் எலும்பு – 200 கிராம்
அரிசி தண்ணீர் – 1லிட்டர்
சீரகம் – 20 கிராம்
தக்காளி – 55 கிராம்
கொத்தமல்லி அரைத்தது – 30 கிராம்
பூண்டு – 10 பல்
நல்லெண்ணெய் – 20 மில்லி
மிளகுத்தூள் – 20 கிராம்
சின்னவெங்காயம் – 30 கிராம்
கறிவேப்பிலை – சிறிதளவு
பச்சை மிளகாய் – 2
இஞ்சி பூண்டு விழுது – 20 கிராம்
பெருங்காயத்தூள் – 2 கிராம்
உப்பு – தேவையான அளவு
ஒரு குக்கரில் எலும்பு துண்டுகளை போட்டு தண்ணீர் சேர்த்து உப்பு கலந்து 10 விசில் வரும்வரை வேக வைக்கவும்.
பின் வெந்ததும் நீரை தனியே பிரித்து எடுக்கவும்.
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது, சீரகம், நறுக்கிய தக்காளி, எலும்புத்துண்டுகள், கொத்தமல்லி, மிளகுத்தூள், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
மற்றொரு வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய பூண்டு, சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
பின் வடிகட்டி வைத்த எலும்புச்சாறு, முன்பு வதக்கி வைத்த கலவையை சேர்த்து பெருங்காயத்தூள் மற்றும் உப்பு கலந்து சூடாக சாப்பிடலாம்.