பன்னீர் செட்டிநாடு கறி ரெசிபி..!
தேவையான பொருட்கள்:
அரைக்க:
ஆயில் 1 ஸ்பூன்
சோம்பு 3/4 ஸ்பூன்
சீரகம் 1 ஸ்பூன்
மல்லி விதை 1 ஸ்பூன்
மிளகு 1/2 ஸ்பூன்
பிரியாணி இலை 1
நட்சத்திர மொக்கு 1
கிராம்பு 4
ஏலக்காய் 3
பட்டை 1
காய்ந்த மிளகாய் 5
கறிவேப்பிலை சிறிது
தேங்காய் துருவல் 1/2 ஸ்பூன்
தண்ணீர் தேவையானது
கறி செய்ய:
ஆயில் 3 ஸ்பூன்
பிரியாணி இலை 1
சோம்பு 1/2 ஸ்பூன்
சீரகம் 1 ஸ்பூன்
கறிவேப்பிலை
வெங்காயம் 1
பூண்டு 4
இஞ்சி 1 துண்டு
மஞ்சள்தூள் 1/2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் 1/2 ஸ்பூன்
சீரகத்தூள் 1/4 ஸ்பூன்
மல்லித்தூள் 1/2 ஸ்பூன்
உப்பு
தக்காளி 1
தண்ணீர் 3 கப்
பன்னீர் 15 பீஸ்
கொத்தமல்லி இலை சிறிது
செய்முறை:
ஒரு ஃபேனை அடுப்பில் வைத்து 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, சீரகம், மல்லிவிதை, மிளகு, நட்சத்திர மொக்கு, பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய், பட்டை, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வாசனை வரும் வரை வதக்க வேண்டும்.
பின் இதில் தேங்காய் துருவல் அரை கப் சேர்த்து வறுத்து ஆறவைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு மிக்ஸி ஜாரில் இதனை போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு ஃபேனை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரியாணி இலை, சோம்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பின் நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்க வேண்டும்.
அனைத்தும் நன்றாக வதங்கியதும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், மல்லித்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
பின் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
தக்காளி வதங்கியதும் அரைத்த மசாலா சேர்த்து கிளறிவிட்டு எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
அதில் 3 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
கறி கொதித்து தயாரானதும் பன்னீர் துண்டுகளை சேர்த்து 5 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும்.
கடைசியில் நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்.
அவ்வளவுதான் சுவையான பன்னீர் செட்டிநாடு கறி தயார்.
இந்த கறி சாதம் மற்றும் சப்பாத்தி பூரிக்கு அருமையாக இருக்கும்.