ஹோட்டல் சுவையில் பட்டர் சிக்கன் இனி வீட்டில் செய்யலாமா…
சிக்கன் -500 கிராம்
வெங்காயம்- 2
தக்காளி- 2
இஞ்சி பூண்டு விழுது- ஒரு ஸ்பூன்
காஷ்மீரி மிளகாய்தூள்- ஒரு ஸ்பூன்
மல்லி தூள்- ஒரு ஸ்பூன்
சீரக தூள்- ஒரு ஸ்பூன்
கரம் மசாலாதூள்- ஒரு ஸ்பூன்
மிளகாய் தூள்- ஒரு ஸ்பூன்
கஸூரி மெத்தி
கொத்தமல்லி இலை
ஃபிரெஷ் கிரீம்- தேவைப்பட்டால்
உப்பு- தேவையான அளவு
எண்ணெய்- தேவையான அளவு
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும்.
அழுவிய சிக்கனில் இஞ்சி பூண்டு விழுது, கெட்டியான தயிர், எலுமிச்சை சாறு, கரம் மசாலா மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக கலக்கி அரை மணி நேரத்திற்கு அப்படியே ஊற விடவும்.
ஒரு வாணலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி ஊறிய சிக்கனை சேர்த்து பொரித்துக் கொள்ளவும்.
ஒரு கடாய் அடுப்பில் வைத்து எண்ணெய் , சிறிது வெண்ணெய் சேர்த்து சூடானதும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும். பின் இஞ்சி பூண்டு விழுது தக்காளி சேர்த்து வதக்கவும், அனைத்தும் நன்றாக வதங்கியதும் சீரகத்தூள், காஷ்மீர் மிளகாய்தூள், கரம் மசாலா, மல்லித்தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
முந்திரியை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
கொதிக்கும் மாசாலாவுடன் முந்திரி விழுது மற்றும் பொரித்த சிக்கனை போட்டு கலக்கி ஃபிரஷ் கிரீம் சேர்த்து 5 நிமிடங்களுக்கு வதக்கி பின் கொத்தமல்லி மற்றும் கஸூரி மெத்தி தூவி இறக்கினால் சுவையான எளிய முறையில் பட்டர் சிக்கன் தயார்.