சார்ஜ் போட்டு காதலியுடன் பேசிய இளைஞர்… மின்சாரம் தாக்கி பலி..!
சென்னை மயிலாப்பூர் பாஸ்கர்புரத்தில் உள்ள அடுக்குமாடு குடியிருப்பில் வசித்து வரும் நேபாளியான கணேஷ் தாபா என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
அதே குடியிருப்பில் வசிக்கும் ஆசைத்தம்பி என்பவர் நேற்று முன் தினம் வேலைக்கு சென்று வீடு திரும்பியபோது திடீரென கணேஷ் தாபாவின் அறையில் இருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது.
உடனடியாக ஆசைத்தம்பி அவரது அறைக்கு சென்று பார்த்தபோது அங்கு கணேஷ் தாபா மின்சாரம் தாக்கி இறந்து கிடந்துள்ளார்.
இதுகுறித்த மயிலாப்பூர் போலீசார்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கணேஷ் தாபாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மயிலாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வந்தனர். முதற்கட்ட விசாரணையில் கணேஷ் தாபா செல்போனில் சார்ஜ் போட்டுக்கொண்டு தனது காதலியுடன் பேசியதும் அப்போது மின்சாரம் தாக்கியதில் அவர் இருந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-பவானி கார்த்திக்