I.N.D.I.A கூட்டணி சனாதன தர்மத்தை அழிக்க நினைக்கிறார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் மாநாட்டில் ஒன்றில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மக்களை ஒடுக்கும் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என தெரிவித்தார். இதனை பலவகையாக திரித்து இந்து மதத்தை இனப்படுகொலை செய்ய வேண்டும் என உதயநிதி பேசியதாக பாஜகவினரும் இந்து மதவாதிகள் கதறிக்கொண்டு இருக்கின்றனர்.
அந்த வகையில் பிரதமர் மோடி சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க உள்ள மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு இன்று சென்றுள்ளார். அங்கு பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் சாகர் மாவட்டத்தில் நடந்த பேரணிக் கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி,
“எதிர்க்கட்சி கூட்டணி மும்பையில் கூட்டம் நடத்தினர். அங்கு அவர்கள் காமாண்டியா கூட்டணியை எவ்வாறு வழிநடத்துவது மற்றும் அரசியல் வியூகம் குறித்து முடிவெடுத்திருப்பார்கள் என்று நான் நினைத்தேன். அவர்கள் மறைமுக கொள்கை ஒன்றினையும் எடுத்துள்ளனர். இந்தியாவின் கலாசாரத்தின் மீது தாக்குதல் நடத்துவது என்பதே அது. இந்தியர்களின் நம்பிக்கை மீது தாக்குதல் நடத்தி ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நாட்டை ஒருங்கிணைத்து வந்த எண்ணங்கள், மதிப்புகள் மற்றும் மரபுகளை அழிக்க நினைக்கிறார்கள்.
‘காமாண்டியா’ கூட்டணியினர் சனாதன தர்மத்தை அழிக்க நினைக்கிறார்கள். இன்று அவர்கள் வெளிப்படையாக சனாதன தர்மத்தின் மீது குறிவைத்துள்ளார்கள். நாளை நம் மீதும் தாக்குதலைத் தொடங்குவார்கள். நாடு முழுவதும் உள்ள சனாதானிகள் மற்றும் நாட்டை மிகவும் நேசிக்கும் அனைவரும் அவர்களிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இதுபோன்றவர்களை நாம் தடுத்து நிறுத்தியாக வேண்டும்” என்று பிரதமர் மோடி பேசினார்.
இதையும் படிக்க: கரு சுமக்கும் பெண்களும் கருவறைக்குள்… வரலாறு காணாத செயல்… முதலவரின் அடுத்த சாதனை..!