மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவிலில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவிலில் உள்ள தபால் நிலையம் முன்பு மத்திய பாஜக அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்தும் , பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மாயமாக்குவதை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிக்க: சனாதனத்தை குறி வைக்கும் எதிர்க்கட்சியினர்.. மீண்டும் போர்க்கொடி தூக்கிய பிரதமர்..!