புதுகோட்டை மக்களை தாக்கி வரும் மர்ம காய்ச்சல்..!!
புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் டெங்கு பாதிப்பால் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 30 க்கு மேற்பட்டோர் சிகிச்சை பெற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி உள்ளிட்ட பல்வேறு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் 37 க்கு மேற்பட்டோர் டெங்கு பாதித்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் நூற்றுக்கு மேற்பட்டோர் மர்ம காய்ச்சல்களால் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் புதுக்கோட்டை மாவட்ட மக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
Discussion about this post