யானைக்கு மணிமண்டபம் கட்டிய பாசக்கார திருவண்ணாமலை மக்கள்..!! ஏன் தெரியுமா..?
திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாமலையார் கோவிலில் மறைந்த யானை ருக்குவிற்கு 49 லட்சம் மதிப்பில் மணிமண்டபம் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் துவக்கி வைத்தார்.
உலகப் பிரசித்தி பெற்ற தலங்களில் ஒன்றாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் யானை கடந்த 2018 ஆம் ஆண்டு உடல் நலக் குறைவால் உயிரிழந்தது.
அதனைத் தொடர்ந்து ஒத்தவாடை வீதியில் ருக்குவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டதோடு அங்கு 2019 ஆம் ஆண்டு நினைவிடம் கட்டப்பட்டது.
பக்தர்கள் யானை ருக்குவின் நினைவிடத்தில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறையிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்ததையொட்டி,
இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் ரூபாய் 49 லட்சம் மதிப்பீட்டில் யானை ருக்குவின் நினைவிடத்தில் மணிமண்டபம் கட்டுவதற்கான கட்டுமான முதற்கட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் துவக்கி வைத்தார்.
கோவில் இணை ஆணையர் ஜோதி அறங்காவலர் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Discussion about this post