உலக செஸ் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு இன்று காலை சென்னையில்..?
அஜர்பைஜான் நாட்டில் நடந்த உலகக் கோப்பை செஸ் போட்டியில் கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி நடைபெற்றது. அதில் 2-ம் இடம் பிடித்து, வெள்ளிப் பதக்கம் வென்று பிரக்ஞானந்தா இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.
உலகச்செஸ் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று விட்டு தாயகம் திரும்பிய பிரக்ஞானந்தாவை மக்கள் சென்னையில் உற்சாகமாக வரவேற்றுள்ளனர். இன்று காலை சென்னை விமானநிலையம் வந்து இறங்கிய பிரக்ஞானந்தாவை தமிழ்நாடு அரசு சார்பில் அதிகாரிகள் மற்றும் ஊடகங்கள் பொதுமக்கள் சிறப்பாக வரவேற்றுள்ளனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் வீரர்கள் பூங்கொத்து கொடுத்து பிரக்ஞானந்தாவை வரவேற்றனர். மலர்களை தூவியும், மலர் கிரீடம் அணிவித்தும் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேளதாளம் முழங்க திறந்தவெளி வாகனம் மூலம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா அழைத்துச் செல்லப்பட்டார்..
Discussion about this post