0.5-0.5 புள்ளி பகிர்ந்து தரப்பட்டன.இரண்டாம் போட்டி நேற்று பைனலின் இரண்டாவது போட்டி நடந்தது. நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரக்ஞானந்தாவும் சரியான பதிலடி தர, 12வது நகர்த்தலில் இருவரும் தங்களது ராணிகளை இழந்தனர். முதல் ஒரு மணி நேர முடிவில் ஆட்டம் சமநிலையில் தான் இருந்தது. முதல் 22 நகர்த்தலில் இருவரும் சமநிலையில் நீடித்தனர்.
அடுத்த சில நகர்த்தலில் தங்களது யானைகளை இழக்க, போட்டி ‘டிராவை’ நோக்கிச் சென்றது. ஒரு மணி நேரம் 22 நிமிட முடிவில், 30 வது நகர்த்தலில் போட்டி ‘டிரா’ ஆனது. தற்போது இருவரும் 1.0-1.0 என சம நிலையில் உள்ளனர்.டை பிரேக்கர் சுற்று இதையடுத்து இன்று ‘டை பிரேக்கர்’ சுற்று துவங்கி நடந்தது. முதல் போட்டியில் வெள்ளை நிற காயங்களுடன் ஆட்டத்தை துவக்கினார் பிரக்ஞானந்தா.
இதையடுத்து, உலகின் முதல்நிலை வீரரான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்த தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா முனைப்பு காட்டி ஆட்டம் ஆடினார்.41வது நகர்த்தல் வரை இருவரும் சமநிலையில் இருந்தனர். கடைசி நேர நெருக்கடியில் பிரக்ஞானந்தா தவறு செய்ய, 47 வது நகர்த்தலில் தோல்வி அடைந்தார். பிரக்ஞானந்தா 1.0-2.0 என பின் தங்கினார். ‘டை பிரேக்கரின்’ இரண்டாவது போட்டியில் கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய பிரக்ஞானந்தா, வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் விளையாடினார்.
மறுபக்கம் கார்ல்சன் போட்டியை ‘டிரா’ செய்தால் போதும் என்ற நிலையில் களமிறங்கினார். வேறு வழியில்லாத நிலையில் 22வது நகர்த்தலில் போட்டியை ‘டிரா’ செய்ய இருவரும் சம்மதித்தனர்.முடிவில் பிரக்ஞானந்தா 1.5-2.5 என்ற கணக்கில் தோல்வியடைந்து இரண்டாவது இடம் பிடித்தார். இதனால் உலகின் முதல்நிலை வீரரான மேக்னஸ் கார்ல்சன் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தார். இதனால் உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டி வரை நுழைந்த இந்திய வீரர் பிரக்ஞானந்தா போராடி தோல்வி அடைந்தார்.
Discussion about this post