அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 4 பேர் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ், மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் தாக்கல் செய்த மனுக்கள் தனி நீதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்டன. தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ், மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் மேல்முறையீடு செய்திருந்தனர்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தி வந்தது. மேல்முறையீட்டு மனுக்கள் மீது 7 நாள் நடந்த வாதங்களுக்கு பின் ஜூன் 28-ல் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணையின்போது, 2022-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி பொதுக்குழு தீர்மானங்களுக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை. தீர்மானங்கள் அடிப்படையில் கட்சி செயல்படுவதால் தாமதமாக தாக்கல் செய்த வழக்கு செல்லத்தக்கதல்ல என பழனிசாமி தரப்பு தெரிவித்தது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்பளித்ததால் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடைவிதிக்க முடியாது என கோர்ட் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. 2022-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி நிறைவேற்றப்பட்ட அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடைவிதிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது.
அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை நீக்கிய சிறப்பு தீர்மானத்துக்கும் தடைவிதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதித்தால் கட்சி செயல்படுவதில் பாதிப்பை ஏற்படுத்தும் என நீதிபதிகள் தெரிவித்தனர். அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் உட்பட 4 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு தடைவிதிக்க ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துவிட்டது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் முகமது சபீர் ஆகியோர் அடங்கிய அமர்வு பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.