முட்டைகோஸ் பகோடா ரெசிபி..!
தேவையான பொருட்கள்
முட்டைக்கோஸ்
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
உப்பு
ஓமம்- 1 தேக்கரண்டி
கடலை மாவு – 2 கப்
தண்ணீர்
எண்ணெய்
செய்முறை:
முட்டைகோஸின் தோலை நீக்கிவிட்டு அதன் நடு பகுதியில் இருக்கும் தண்டை நீக்கிவிட்டு பின் முட்டைக்கோஸின் இலைகளை மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
வெட்டிய முட்டைக்கோஸை ஒரு கிண்ணத்தில் போட்டு அதில் மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள், உப்பு,ஓமம்,கடலை மாவு மற்றும் தேவையான அளவு நீரை கொஞ்சம் கொஞ்சமாக தெளித்து நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி இந்த முட்டைகோஸ் கலவையை சிறிது சிறிதாக சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
அவ்வளவுதான் முட்டைகோஸ் பகோடா தயார்.