உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக..!! களத்தில் மதிமுகம்..!!
திருப்பத்தூர் மாவட்டம் :
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக தற்போது தர்ப்பகராஜ் என்பவர் செயல்பட்டு வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர் பெயரில் போலியான ஆவணத்தை வைத்து அடையாளம் தெரியாத நபர் யாரோ இன்ஸ்டாகிராம் பதிவு செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் அந்த அடையாளம் தெரியாத நபரை உடனடியாக கண்டறியும்படி திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார்மனு அளித்துள்ளார். மேலும் புகார் மனுவை பெற்றுக்கொண்ட காவல் துறையினர் அந்த அடையாளம் தெரியாத நபர் யார் எதற்காக பொய்யான ஆவணங்களை வைத்து மாவட்ட ஆட்சியர் பெயரில் இன்ஸ்டாகிராம் பதிவு செய்துள்ளார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டம் :
கரூரை சேர்ந்த கலைவாணன் தனது மனைவி மகேஸ்வரி மற்றும் மகள் ஆர்த்தி ஆகியோருடன் தனது காரில் ஜெயங் கொண்டத்திலிருந்து கரூர் நோக்கி திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார் அப்போது திருச்சியில் இருந்து ஜெயங்கொண்டம் நோக்கி எதிர்திசையில் சீர்காழி பகுதியை சேர்ந்த மருத்துவர் ரமேஷ் தனது குடும்பத்துடன் வந்த கார் எதிர்பாராத விதமாக கலைவாணன் ஒட்டி வந்த காரின் மீது பயங்கரமாக மோதியது இதில் கலைவாணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.. படுகாயமடைந்த கலைவாணனின் மனைவி மற்றும் மகள் மற்றொரு காரில் வந்த மருத்துவர் ரமேஷ் அவரின் மனைவி மகன் , மகள் ஆகிய ஆறு பேரும் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ராணிப்பேட்டை :
ராணிப்பேட்டையில் 18 வயது நிரம்பாத சிறுமிக்கு அதே பகுதியில் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக சமூக குழந்தை பாதுகாப்பு நலத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வருவாய் துறையினர் மற்றும் சமூக குழந்தை பாதுகாப்பு நலத்துறை அதிகாரிகள் சிறுமியை பெற்றோர்களிடம் சில அறிவுரைகளை வழங்கி குழந்தை திருமணம் சட்டப்படி குற்றம் என்று தடுத்து நிறுத்தியதோடு சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.. மேலும் இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கையில் இம்மாவட்டத்தில் குழந்தை திருமணம் குறித்து போதிய விழிப்புணர்வு மக்களிடையே இல்லாத காரணத்தினால் இதுபோன்ற குழந்தை திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் இதன் மீது அரசு கவனத்தில் கொண்டு மக்களுக்கு தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிராமந்தோறும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு மற்றும் கூட்டங்கள் நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் மேலும் இதே பகுதியில் கடந்த மாதம் நான்கு சிறுமிகளுக்கு குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது..
ஜோலார் பேட்டை :
எஸ்வந்த்பூர் செல்லும் அதிவிரைவு ரயிலில் கஞ்சா கடத்தி வருவதாக ஜோலார்பேட்டை இருப்பு பாதை காவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன் பேரில் இருப்புப் பாதை உதவி காவல் ஆய்வாளர் ஜெயக்குமார் தலைமையில் போலீசார் இந்த ரயிலைய சோதனை மேற்கொண்டதில் ரயிலின் பொது பெட்டியில் சந்தேகத்துக்குரிய இருந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹிராலால் நியால் என்பதும் இவர் ஒரிசாவில் இருந்து மூன்று கிலோ கஞ்சாவை ரயிலில் கடத்தி வந்ததும் தெரிய வந்தது இதன் காரணமாக ஜோலார்பேட்டை இருப்பு பாதை காவலர் ஹிராலால் நியாலை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். மேலும் இவரிடம் இருந்த மூன்று கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர் மேலும் இவரிடம் ஜோலார்பேட்டை இருப்பு பாதை போலீசார் தொடர்ந்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் :
திருப்பூரில் ஈரோட்டைச் சேர்ந்த உலகநாதன் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தை பனியன் நிறுவனம் மற்றும் வீடுகளாக பிரித்து வாடகைக்கு விட்டுள்ளார். இந்த கட்டிடத்தில் 50க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கி பல்வேறு பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர் இந்நிலையில் உணவு சமைத்து வைத்து விட்டு பீகாரைச் சேர்ந்த இருவர் படி அருகே அமர்ந்து தங்களது உறவினர்களிடம் போனில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது சிவகுமார் தடுமாறி கீழே விழுந்துள்ளார் அவரைக் காப்பாற்ற முயன்ற ராஜ்குமாரும் தவறி கீழே விழுந்தார். இதில் சிவக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ராஜ்குமாரும் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த திருமுருகன் பூண்டி காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..