உடலுக்கு வலுச்சேர்க்கும் முளைக்கட்டிய ராகி உப்மா..!
முளைகட்டிய ராகி மாவு – 1 கப்
தண்ணீர்
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
கடலை பருப்பு – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
வேர்க்கடலை – 1 மேசைக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள்
கறிவேப்பிலை
இஞ்சி
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 6
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
உப்பு – 1 தேக்கரண்டி
துருவிய தேங்காய்
ஒரு கப் முளைக்கட்டிய ராகி மாவு எடுத்து அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மாவு உதிரி உதிரியாக வரும்வரை கிளறிக் கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் எண்ணெய் தடவி ராகி மாவை சேர்த்து இட்லி பாத்திரத்தில் வைத்து வேகவைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி அதில் கடலை பருப்பு,உளுத்தம் பருப்பு, வேர்க்கடலை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
அடுத்ததாக கடுகு,சீரகம்,பெருங்காயத்தூள்,கறிவேப்பிலை மற்றும் பொடியாக நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கவும்.
பின் பொடியாக நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
பின் மஞ்சள்தூள்,உப்பு, துருவிய தேங்காய் சேர்த்து கலந்து வேக வைத்த ராகி மாவையும் சேர்த்து நெய் விட்டு கலந்துக் கொள்ள வேண்டும்.
அவ்வளவுதான் சுவையான ராகி உப்மா தயார்.