ஒத்த பனியம் ரெசிபி…!
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு – 1/2 கிலோ
தேங்காய் – 2
முட்டை – 1
உப்பு – சிட்டிகை
நெய் – 100 கிராம்
எண்ணெய் – 100 கிராம்
செய்முறை:
அரிசி மாவை முதலில் சலித்து எடுத்து வைக்கவும்.
தேங்காய் உடைத்து ஒரு மூடியை துருவியும் மீதம் மூன்று மூடியை பால் எடுத்துக் கொள்ளவும்.
அரிசி மாவில் உப்பு மற்றும் தேங்காய் பால் ஊற்றி ஊற வைக்கவும். மாவை கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.
தோசை ஊற்றுவதற்கு முன்பு முட்டை மற்றும் துருவிய தேங்காய் போட்டு நன்றாக அடித்து கலக்கவும்.
மாவு ரெடி, தோசைக்கல்லில் ஊற்றி நெய் மற்றும் எண்ணெய் கலந்து ஊற்றி இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.
அவ்ளோதான் சுவையான ஒத்த பனியம் தயார்.
