சுடச்சுட பிரிஞ்சி சாதம்…!
பட்டை,கிராம்பு,ஏலக்காய்
பெருஞ்சீரகம் கால் ஸ்பூன்
பூண்டு 3
இஞ்சி 1 துண்டு
பச்சை மிளகாய் 2
துருவிய தேங்காய்
புதினா இலை
கொத்தமல்லி இலை
தண்ணீர்
பாஸ்மதி அரிசி 1 கப்
நெய்1 1/2 ஸ்பூன்
எண்ணெய் 1 ஸ்பூன்
பட்டை,கிராம்பு,ஏலக்காய்,அன்னாசிபூ,கல்பாசி,பிரியாணி இலை
வெங்காயம்1
பச்சை மிளகாய் 2
அரைத்த மசாலா விழுது
தக்காளி 2
உருளைக்கிழங்கு 1
கேரட் 1
பீன்ஸ் 1 கப்
காலிஃபிளவர் 1 கப்
பச்சை பட்டாணி அரை கப்
உப்பு தேவையானது
புதினா இலை
கொத்தமல்லி இலை
தேங்காய் பால் 2 கப்
அரிசியை சுத்தம் செய்து 30 நிமிடங்களுக்கு ஊற வைக்க வேண்டும்.
மிக்ஸியில் மசாலா அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை எல்லாம் போட்டு மசாலா விழுதாக அரைக்க வேண்டும்.
குக்கரில் நெய்,எண்ணெய் ஊற்றி தாளிப்பு பொருட்களை எல்லாம் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
பின் வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
அதில் அரைத்த மசாலா விழுது சேர்த்து வதக்கவும். பின் தக்காளியை வதக்கி, காய்கறிகளை எல்லாம் போட்டு உப்பு சேர்த்து கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளை எல்லாம் சேர்த்து வதக்க வேண்டும்.
பின் அரிசி மற்றும் தேங்காய் பால் ஊற்றி தேவையான தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி ஒரு விசில் வைத்து இறக்கவும்.
அவ்வளவுதான் சூடான பிரிஞ்சி சாதம் தயார்.