சினிமா வாய்ப்பு இல்லாததால் பாலியல் தொழிலில் ஈடுப்பட்டு வந்த சினிமா துணைநடிகையை காவல்துறை கைது செய்துள்ளனர்.
சென்னை வளசரவாக்கம் அன்பு நகரில் உள்ள அப்பார்ட்மெண்ட் ஒன்றில் அறிமுகம் இல்லாதவர்கள் அடிக்கடி வந்து சென்றுள்ளனர். இதை பார்த்து சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து மப்டியில் காவல்துறை விசாரணை நடத்தி வந்த நிலையில் விபச்சாரம் நடந்து வருவதாக கண்டுபிடித்தனர். மேலும் அதை நடத்துவது சினிமாவில் வாய்ப்புக் கிடைக்காத நடிகைகள் என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் அங்கு 6 ஆண்டுகளாக விபச்சார தொழில் நடந்து வந்துள்ளனர்.
இதையடுத்து இவர்களை கைது செய்ய காவல்துறை கெட்டப்பில் சென்றால் தப்பிவிடுவர் என்பதால் வாடிக்கையாளர் போல் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அப்போது மறுமுனையில் பேசிய நபர் ஒருவர் முன்னணி நடிகைகள் என்றால் ஒரு மணி நேரத்திற்கு ரூ 25 ஆயிரம் , துணை நடிகைகளுக்கு ரூ 10 ஆயிரம் என கூறியுள்ளார். முன்னணி நடிகை வேண்டும் என்றால் ஒரு நாள் முன்பே புக் செய்ய வேண்டும் என கூறியுள்ளார். ஆனால் இப்போதைக்கு துணை நடிகை மட்டும்தான் என தெரிக்கவே சரி என்று காவலர் போனை கட் செய்துள்ளார்.
பின்னர் வீட்டு முகவரியை வாங்கிக் கொண்டு போன் இணைப்பை துண்டித்துவிட்டார். இதையடுத்து காவலர் ஒருவரை வாடிக்கையாளர் போல் முதலில் அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு அனுப்பினர். அவரை மற்ற காவலர்கள் மாறுவேடத்தில் பின்தொடர்ந்து வந்தனர். அப்போது அங்கு ஒரே ஒரு துணை நடிகை மட்டும் இருந்தார். அவரை போலீஸர் கைது செய்து அவரிடம் இருந்த 2 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர் இந்த பாலியல் தொழிலுக்கு மூளையாக இருந்த வைதேகி என்கிற துணைநடிகையும் காவல்துறை கைது செய்தனர். மேலும், அவர் சினிமாவில் வாய்ப்பு இல்லாததால் இப்படி செய்து வருகிறோம் என தெரிவித்தார்.
இதையும் படிக்க : சாதியைக் காரணம் காட்டி சமையல் செய்ய தடை… கனிமொழியே நேரில் சென்று ஊக்கமளித்த நெகிழ்ச்சி சம்பவம்..!