கர்நாடக அரசு கோரிக்கையை ஏற்கவில்லை என்றால்.. தமிழக அரசின் முடிவு இப்படி தான் இருக்கும்..!
அடுத்த 15 நாட்கள் தமிழகத்திற்கு தினமும் 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்துள்ளது.
கர்நாடகாவில் இருந்து உச்சநீதிமன்ற உத்தரவின் படி ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ள அளவில் காவேரி நீரை தமிழகத்திற்கு திறக்ககோரி தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இதற்காக தமிழக அரசு, காவேரி ஒழுங்காற்று வாரியம், காவேரி மேலாண்மை வாரியம், உச்சநீதிமன்றம், ஒன்றிய அரசு என பல்வேறு வகையில் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து வருகிறது.
இந்நிலையில், ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
அதேவேளையில், வழக்கமான நடைமுறையின்படி தண்ணீர் திறந்துவிட உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என்றும் கர்நாடக அணைகளில் தண்ணீர் மோதுமான அளவில் இல்லை என்றும் கர்நாடக அரசு தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில் டெல்லியில் காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழு இன்று நடைப்பெற்றது. அதில் தமிழக அரசு சார்பில் கர்நாடகத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவு, அங்குள்ள அணைகளில் உள்ள தண்ணீரின் அளவு உள்ளிட்ட விவரங்கள் தெரிவிக்கப்பட்டன.
இவற்றை ஆய்வு செய்த காவிரி ஒழுங்காற்று குழு, அடுத்த 15 நாட்கள் தமிழகத்திற்கு தினமும் 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
இந்த பரிந்துரையை கர்நாடக அரசு ஏற்காவிடில் தமிழக அரசு அடுத்தகட்டமாக காவிரி மேலாண்மை வாரியத்தில் முறையிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Discussion about this post