சாதனத்தை விமர்சிப்பது என்பது ஒட்டுமொத்த இந்து மக்களை விமர்சிப்பதாக இருக்காது என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள சி பி எம் ஜி அலுவலக வளாகத்தின் எதிரில் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் மற்றும் தேசிய கிராமப்புற அஞ்சல் ஊழியர் சங்கம் இணைந்து 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கோஷங்களை எழுப்பிய பின் அவர்களது பத்தாம்ச கோரிக்கைகளை மனுவாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களிடம் வழங்கினர், அதனை விசிக தலைவர் திருமாவளவன் பெற்றுக் கொண்டு பின் செய்தியாளர்களை சந்தித்தார் ….
அப்பொழுது பேசிய அவர்,
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சிறப்பாக பணியாற்றி வருகிறார். இன்று அந்தத் துறையை மேம்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார், ஆக்கிரமிப்புகளை அகற்றி, கோடிகானக்காண சொத்துக்களை மீட்டு அறநிலை துறையில் நடந்து வரும் ஊழல்களை கட்டுப்படுத்தி வருகிறார். இதனால் ஆத்திரமடைந்து இருக்கிற சனாதன கட்சிகள் அமைச்சரை பதிவு விலக வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றார்கள், அவர்கள் கனவு பழிக்காது
அமைச்சர் சேகர்பாபுவின் பணிகள் பெரும்பாலான இந்து சமூகத்தை சேர்ந்த உழைக்கும் மக்கள் வரவேற்கவும் பாராட்டவும் செய்கிறார்கள். அதனை பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் போராட்டம் நடத்தி வருகிறார்கள் அந்த போராட்டம் எடுபடாது.
இந்திய ஒன்றிய அமைச்சர் ஷெகாவத் அவர்கள் பேசி இருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. அவர் எத்தகைய அரசியலை முன்னெடுக்கிறார் என்பதை அவர் அவருடைய பேச்சிலிருந்து உணர்ந்து கொள்ள முடிகிறது. நாக்கை அருப்பதாகவும் கண்னை நோண்டுவோம் என்று தெருவில் நிற்பவர்கள் பேசவில்லை அல்லது மதம் சார்ந்த அமைப்புகளை சார்ந்தவர்கள் பேசவில்லை, அரசியல் கட்சி சார்ந்த மிக உயர்ந்த அமைச்சர் பொறுப்பில் இருக்கின்ற ஒருவர் இப்படி பேசுகிறார் என்றால் மற்றவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் என்று எண்ணி பார்க்க வேண்டும்.
சாதனத்தை விமர்சிப்பது என்பது ஒட்டுமொத்த இந்து மக்களை விமர்சிப்பதாக இருக்காது. அமைச்சரின் இந்த பேச்சு விசிக சார்பில் மிக வன்மையாக கண்டிக்கிறது எனத் தெரிவித்தார்.
இதையும் படிக்க: சனாதனத்தைக் காப்பற்ற வந்த அடுத்த ஒன்றிய அமைச்சர்.. வைரலாகும் பகீர் பேட்டி..!