டீசல் வாகனங்களுக்கு இனி கூடுதல் ஜி.எஸ்.டி..!! எவ்வளவு வரி தெரியுமா..?
டீசல் வாகனங்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்க நிதியமைச்சகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு ஒன்றிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி மறுப்பு தெரிவித்துள்ளார்.
நாட்டில் டீசல் கார்களுக்கு கூடுதலாக 10 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பரிந்துரை செய்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. ( Nitin Gadkari @nitin_gadkari )
மேலும் நாட்டில் டீசல் வாகனங்களினால் சுற்றுச்சூழல் மாசு அதிகரித்து வருவதால் அவற்றின் எண்ணிக்கையைக் குறைக்க ஜிஎஸ்டி வரியை அதிகரிக்க வேண்டும் என்று ஒன்றிய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நிதின் கட்கரி பரிந்துரைத்துள்ளார் என்றும் தகவல் வெளியானது.
இந்த செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள நிதின் கட்கரி இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
அதில், டீசல் என்ஜின் வாகனங்களுக்கு கூடுதலாக 10 சதவீத வரி விதிக்க ஒன்றிய அரசு முன்மொழியவில்லை என்றும், 2070க்குள் கார்பன் வெளியீட்டு அளவு நிகர பூஜ்ஜியத்தை அடைவதற்கும், டீசல் போன்ற அபாயகரமான எரிபொருட்களால் ஏற்படும் காற்று மாசுபாட்டின் அளவைக் குறைப்பது அவசியம் என பதிவிட்டுள்ளார்.
ஆட்டோமொபைல் விற்பனையில் விரைவான வளர்ச்சிக்கும் ஏற்ப, தூய்மையான மற்றும் பசுமையான மாற்று எரிபொருளை தீவிரமாக ஏற்றுக்கொள்வது அவசியம் என்றும், இந்த எரிபொருட்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுவதாகவும், செலவு குறைவானதாகவும் மற்றும் மாசு இல்லாததாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..