அடுத்த தேர்தல்களில் தெலுங்கு தேச கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளதாக ஜனசேனா கட்சித்தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநில முன்னாள் முதல் அமைச்சரும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு மீது 371 கோடி ரூபாய் திறன் மேம்பாட்டு பயிற்சி தொடர்பான வழக்கில் அவரை காவல்துரையினர் கைது செய்தனர். ராஜமுந்திரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சந்திரபாபு நாயுடுவை ஜனசேனா கட்சிதலைவர் பவன் கல்யாண் சந்தித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு எதிரான வாக்குகள் பிளவுபடாமல் இருப்பதே தங்கள் நோக்கம் என கூறினார்.
அடுத்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியும், ஜனசேனாவும் இணைந்து போட்டியிடும் என தெரிவித்த அவர், சிறையில் சந்திரபாபு நாயுடுவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாகவும், இதனை பிரதமர் மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாகவும் கூறினார்.
இதையும் படிக்க: இந்தியாவின் பெயர் மாற்றம்.. பாஜகவின் சதித் திட்டம்.. அனைத்தையும் நாட்டு மக்களுக்கு போட்டுடைத்த மதிமுக மாநாடு… முழு விவரம் உள்ளே..!
Discussion about this post