விமர்சிப்பார்களை பற்றி கவலைப்படாமல் நாம் மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவோம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை திருவெல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் மகளிர் உரிமைத் திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து பெண்களுக்கு ஏ.டி.எம் கார்டுகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,
காலை உணவுத்திட்டம் ஒரு கண், உரிமைத் திட்டம் ஒரு கண்.
இரண்டும் இரண்டு கண் போன்றது, இதில் எது முக்கியம் என்று எப்படி சொல்வது. இரண்டுமே நல்ல திட்டம் தான். தேர்தல் வாக்குறுதியில் சொல்லாத திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறோம். உரிமைத் திட்ட மனுக்கள் ஏற்கப்படாதவர்களுக்கு மீண்டும் விண்ணப்பிக்க ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தகுதியுடைய அனைவருக்கும் திட்டம் சென்றடையும்
இத்திட்டத்தை மக்கள் வாழ்த்துகின்றனர். எந்த திட்டம் செயல்படுத்தினாலும் எதிர்மறை விமர்சனங்கள் வரத்தான் செய்யும். நாம் சும்மா இருந்தா கூட விமர்சிப்பார்கள். அதுகுறித்து கவலைப்படாமல் நாம் மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவோம் என தெரிவித்தார்.
இதையும் படிக்க: ”மறக்கமுடியாத நாள்”… கனிமொழி எம்.பி நெகிழ்ச்சி..!